வினோதம்... வெயிலில் கரடி வேடம் போட்டு நிற்கும் விவசாயிகள்!  

 

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பிரோஸ்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களின் பயிர்களைப் பாதுகாக்க ஒரு வினோதமான முறையைக் கையாண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை உண்பதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றன. சாதாரணமான சோளக்காட்டு பொம்மைகள் மற்றும் பிற விரட்டும் முறைகளுக்குக் குரங்குகள் அஞ்சாத நிலையில், தற்போது விவசாயிகள் பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கரடி வேடம் அணிந்து வயல்வெளிகளில் நின்று குரங்குகளை விரட்டி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய தரம்வீர் என்ற விவசாயி, "தினமும் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்து பயிர்களைச் சேதப்படுத்துகின்றன. இவற்றை விரட்டுவதற்காக நாங்கள் சுமார் 4,000 ரூபாய் செலவில் இந்தக் கரடி உடைகளை வாங்கியுள்ளோம். கரடியைக் கண்டால் குரங்குகள் அஞ்சி ஓடுவதால், இந்த முறையைப் பின்பற்றி வருகிறோம்," என்று வேதனையுடன் தெரிவித்தார். சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கனமான கரடி உடைகளை அணிந்து கொண்டு மணிக்கணக்கில் வயல்களில் நிற்பது மிகுந்த சிரமமாக இருந்தாலும், தங்களின் வாழ்வாதாரமான பயிர்களைக் காக்க வேறு வழியின்றி இந்த நூதன முயற்சியைச் செய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரி மனோஜ் குமாரிடம் கேட்டபோது, "விவசாயிகள் கரடி வேடம் அணிவது குறித்து எனக்குத் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், குரங்குகள் ஒரு இடத்திலிருந்து விரட்டப்பட்டால் அவை வேறு இடத்திற்குச் சென்று தொல்லை கொடுக்கும். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். குரங்குகளைப் பிடித்து அடர்ந்த காடுகளுக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை மேலதிகாரிகளின் உத்தரவைப் பெற்று விரைவில் மேற்கொள்வோம்," என்று தெரிவித்தார். அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளே களத்தில் இறங்கி இத்தகைய 'ஜுகாட்' (Jugaad) முறைகளைக் கையாள்வது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்