undefined

 கருப்பு துணியுடன் வந்த விவசாயிகள்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!  

 
 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியும், சட்டை மற்றும் சேலைகளில் கருப்பு பேட்ச் அணிந்தும் பங்கேற்றனர்.

கலெக்டர் கூட்டத்தை தொடங்கி வைத்ததும் விவசாயிகள் பேசினர். கறிக்கோழி பண்ணை கூலி உயர்வு தொடர்பாக அறவழியில் போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை கைது செய்ததை அவர்கள் கடுமையாக கண்டித்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தை கண்டித்தே கருப்பு துணி கட்டி வந்ததாக தெரிவித்த அவர்கள், கோரிக்கை நிறைவேறாததால் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் வழக்கம்போல் தொடரப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!