ஃபாஸ்டேக் வசூலில் அதிர்ச்சி… 17.7 லட்சம் தவறான கட்டணம் திரும்ப வழங்கல்!
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாமதத்தை தவிர்க்க ஃபாஸ்டேக் முறை அமலில் உள்ளது. சுங்க சாவடியை கடக்கும் போது வாகன எண் ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சாவடிக்குள் செல்லாத வாகனங்களுக்கும் கட்டணம் பிடிக்கப்பட்டது வாகன உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் மதுரவாயல், பரனூர், விக்கிரவாண்டி, போரூர், புழல் உள்ளிட்ட பல சுங்க சாவடிகளில் இந்த பிரச்னை ஏற்பட்டதாக புகார் எழுந்தது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதும், செல்லாத வாகனங்களுக்கும் பணம் பிடித்தம் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 464 கோடி ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளில் 17.66 லட்சம் தவறான பிடித்தங்கள் கண்டறியப்பட்டு பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கைமுறையாக வாகன எண்களை பதிவு செய்யும் போது பிழைகள் ஏற்படுவதால் இந்த பிரச்னை வருவதாகவும், அந்த முறையை முழுமையாக நிறுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!