undefined

 வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்... பிப்ரவரி 1 முதல்  பாஸ்டேக் விதிகளில் அதிரடி மாற்றம்...   !

 

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பாஸ்டேக் (FASTag) பெறும் விதிகளில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு பாஸ்டேக் வாங்கும் போது கடைபிடிக்கப்பட்டு வந்த கே.ஒய்.சி (KYC) நடைமுறை வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அதிரடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் வாங்கும் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, இனி வங்கிகளே நேரடியாக 'வாகன்' (VAHAN) தரவுதளத்தின் மூலம் வாகனங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைனில் பாஸ்டேக் வாங்குபவர்களுக்கும் இதே 'வாகன்' தரவுதள சரிபார்ப்பு முறைதான் இனி பொருந்தும்.

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதால், பாஸ்டேக் பெறுவது முன்பை விட மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. டோல்கேட்களில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும், டிஜிட்டல் முறையை எளிமைப்படுத்தவும் இந்த மாற்றம் பெரும் உதவியாக இருக்கும் என வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!