குழந்தையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த தந்தை!
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது பச்சிளம் குழந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மனைவியைத் தாக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் தாயின் மடியில் இருந்த 6 மாதக் குழந்தை மீது கோடாரி பலமாகத் தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மனைவியைக் கொல்ல முயன்றபோது தவறுதலாகக் குழந்தை மீது தாக்குதல் நடந்ததா அல்லது ஆத்திரத்தில் குழந்தையைத் தாக்கினாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள், குழந்தையைக் கொன்ற நபரைப்பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையைக் கொன்ற தந்தையைக் கைது செய்த அதிகாரிகள், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அற்பக் காரணத்திற்காகப் பெற்ற தந்தையே குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!