வேறு சாதி என்பதால் காதலனைக் கொன்ற தந்தை... சடலத்துடன் திருமணம் செய்த காதலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதலர்கள், பெண்ணின் குடும்பத்தினரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. "மரணத்திலும் எங்கள் காதல் வென்றது" என்று அந்த இளம் காதலி உறுதியுடன் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நானந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சக்ஷம் டேட் மற்றும் ஆஞ்சலின் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு ஆஞ்சலின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது தந்தையும் சகோதரர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி, அன்சல், தனது காதலன் சக்ஷமைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.
ஆஞ்சலின் இந்த முடிவைப் பற்றி அறிந்த அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று சக்ஷமைக் கொடூரமான முறையில் கொலை செய்யத் திட்டமிட்டனர். முதலில் சக்ஷமைக் கடுமையாகத் தாக்கினர். பிறகு துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டுள்ளனர். அத்துடன் நிற்காமல், கல்லால் அவரது தலையை நசுக்கிக் கொடூரமாகச் சக்ஷமைக் கொலை செய்தனர். காதல் விவகாரத்துக்காக நிகழ்த்தப்பட்ட இந்த ஆணவக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துக் கொண்டிருந்த போது, அன்சலின் துணிச்சலுடன் அவர் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் இறந்த தனது காதலன் சக்ஷமின் சடலத்தை அணுகி, யாரும் எதிர்பாராத விதமாகத் திருமணம் செய்து கொண்டார். அன்சலின், சக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசினார். பின்னர் தனது நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு, இறந்த காதலனைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டார்.
அப்போது, "சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது. என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர்" என்று கூறிய அன்சலின், இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் சக்ஷமின் வீட்டிலேயே ஒரு மருமகளாகத் தனது வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் சபதம் எடுத்துள்ளார்.
சக்ஷமின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆணவக் கொலையில் ஈடுபட்ட அன்சலின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்து, இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர். சாதிக்காக உயிரைப் பறிக்கும் ஆணவக் கொலையும், மரணத்திலும் காதலை நிலைநாட்டிய இளம்பெண்ணின் செயலும் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!