மனைவியிடம் விட மனசில்ல... குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து தந்தை, பாட்டி தற்கொலை...!
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பய்யனூர் கிராமத்தில் ராமன்தளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஷா (56), அவரது மகன் கலாதரன் (36), பேத்தி ஹிமா (6), பேரன் கண்ணன் (2) ஆகியோர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கலாதரனின் மனைவி நயன்தாரா, 2 குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், போலீசார் கலாதரனை தொடர்பு கொள்ள முயன்றனர். தொடர்பு கிடைக்காததால் வீட்டிற்கு சென்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனையில் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலாதரனும், அவரது தாய் உஷாவும் விஷம் குடித்து பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் தற்கொலை குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!