undefined

நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்... பல  வருடங்களாக  தந்தை என்னை  பாலியல் பலாத்காரம் செய்தார்... கதறும்   டீன் ஏஜ் பெண் ! 

 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 19 வயது பெண், மைனராக இருந்த காலத்திலிருந்தே தனது தந்தை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தாய்க்கு புற்றுநோய் ஏற்பட்டு படுக்கையில் இருந்தபோது இந்த கொடுமை தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். உப்லேட்டாவில் உள்ள வீட்டில் இருந்து அந்த பெண் காணாமல் போனதாக தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தேடுதல் நடத்தி அவரை மீட்டனர்.

விசாரணையின் போது, அந்த பெண் தந்தைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டுக்குள்ளேயே துஷ்பிரயோகம் நடந்ததாக கூறினார். விசாரணையில் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்ததாக கூறப்படும் அறையில் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மருமகளையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் தனியாக விசாரணை நடைபெற்று வருவதாக ராஜ்கோட் கிராமப்புற போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!