இன்ஸ்டாவால் விபரீதம்… மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை!
மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்த சிம்யா (23) என்பவருக்கு திருப்பூரை சேர்ந்த பிரேம்குமார் (27) உடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து அடிக்கடி தகராறு செய்ததால், சிம்யாவின் தந்தை ஆறுமுகம் திருப்பூர் முருகம்பாளையம் அருகே தனியாக வீடு எடுத்து கொடுத்தார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவருடன் சிம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. குடிகார கணவரை விட்டுவிட்டு தன்னுடன் வாழ வருமாறு பிரவீன்குமார் அழைத்ததை தொடர்ந்து, சிம்யா தனது 3 வயது மகளுடன் கடந்த 2-ந் தேதி கன்னியாகுமரி சென்றார். மனைவி மற்றும் குழந்தை மாயமானதாக கணவர் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் அவர்களை மீட்டு வீட்டுக்கு அனுப்பினர்.
நேற்று மதியம் வீட்டில் இருந்த சிம்யாவிடம், “கணவனை விட்டுவிட்டு ஏன் வேறு ஒருவருடன் சென்றாய்” என தந்தை ஆறுமுகம் கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியால் மகள் சிம்யாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். தகவல் அறிந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!