மின்வேலியில் சிக்கி தந்தை–இரு மகன்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்!
ராமநாயினிகுப்பத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (55), மகன்கள் விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) ஆகியோருடன் திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்துக்கு சென்றபோது, அக்கருகே உள்ள நிலத்தை சுற்றி வனவிலங்குகளைத் தடுக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் முதலில் ஜானகிராமன் சிக்கி தரையில் விழுந்தார். தந்தையை காப்பாற்ற முயன்ற மூன்று மகன்களும் மின்சாரம் பாய்ந்து வீழ்ந்தனர். இதில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகேஷ் தீவிர காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் வேப்பங்குப்பம் போலீஸார் விரைந்து வந்து மின்வாரியத்திடம் மின்சாரம் துண்டிக்கச் செய்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், மின்வேலி அமைத்திருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (52) என்பது தெரியவந்தது. அவர் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது உறுதியாக, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!