undefined

25ஆம் தேதி முதல் தமிழகத்தில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

 

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல் அருகிலுள்ள வள்ளிபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் லாரி மற்றும் பேருந்துகளுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் முன்பு ரூ.2,500 ஆக இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய அறிவிப்பின் மூலம் இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

புதிய கட்டணப்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் லாரி, மினி சரக்கு வாகனம் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.14,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.28,200 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிக கட்டணத்தை செலுத்த முடியாமல் பலர் தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் லாரிகள் இயங்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!