உலகப்போர் அச்சமா? "ஈரானை விட்டு உடனே வெளியேறுங்க" - அமெரிக்க அவசர உத்தரவு!
மத்திய கிழக்கு நாடான ஈரானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிமலைப் பிழம்பாக வெடித்துள்ள மக்கள் புரட்சி, இப்போது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கருத்தில் கொண்டு, ஈரானில் தங்கியுள்ள தனது நாட்டு மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் 28-ல் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது ஈரானின் 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளது. விண்ணைத் தொடும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடே இந்தத் தீயிற்குக் காரணம். போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு ராணுவத்தை இறக்கியுள்ளது. மனித உரிமை அமைப்புகளின் தகவல்படி, இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 2,500-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியுலகுக்குத் தகவல் பரவாமல் தடுக்க இணையம் மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஈரான் வான்பகுதி தற்போது பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளதாலும், பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் அமெரிக்கா தனது குடிமக்களுக்குப் புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
விமானங்கள் கிடைக்காத பட்சத்தில், உடனடியாகத் தரைவழியாக அர்மீனியா அல்லது துருக்கி நாடுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) வரை மட்டுமே சில எல்லைகள் திறந்திருக்க வாய்ப்புள்ளதால், அதற்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடிமக்கள் எவரேனும் போராட்டக் களத்தில் சிக்கினால், அவர்களை ஈரான் அரசு கைது செய்யக்கூடும் என்ற அச்சமும் வாஷிங்டனுக்கு உள்ளது.
ஈரானின் இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க நியமிக்கப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய வசதி மூலம் ஈரானிய மக்களுக்கு இணையம் வழங்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. இது ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீடாகப் பார்க்கப்படுவதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!