undefined

குடியரசு தின அணிவகுப்பில்  பெண் கமாண்டன்ட்… இந்தியாவின் புதிய கௌரவம்  !

 

 

டெல்லி கடமைப் பாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆண்கள் பிரிவை பெண் அதிகாரி ஒருவர் தலைமையேற்று நடத்த உள்ளார். இந்த அரிய நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் முறையாக ஆண்கள் படையை ஒரு பெண் அதிகாரி வழிநடத்துவது வரலாற்றுச் சிறப்பாக அமைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷேரா கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் பாலா (26), 2023-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சிஆர்பிஎப் உதவி கமாண்டன்டாக பணியில் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முக்கிய பொறுப்பை அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டு 140 வீரர்கள் அடங்கிய சிஆர்பிஎப் அணிவகுப்பை அவர் தலைமையேற்று நடத்துகிறார்.

பெண்களுக்கும் பாதுகாப்புப் படைகளில் சம வாய்ப்பு வழங்கப்படுவதை இந்த நிகழ்வு உறுதி செய்கிறது. சிம்ரன் பாலாவின் கம்பீர நடை, இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் பெரும் ஊக்கமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியரசு தினத்தில் அவரது அணிவகுப்பை காண தேசமே ஆவலுடன் காத்திருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!