undefined

 வீடியோ கால் பேசியபடியே பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

 
 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஆரோக்கிய மாதா. 2015ல் திருமணமான அவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். பணியின் போது மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமாருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக அவர் நேரில் சந்திப்பதை குறைத்ததால் ஆரோக்கிய மாதா மனவருத்தத்தில் இருந்ததாக தகவல். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர், ரஞ்சித் குமாரிடம் வீடியோ கால் செய்து வருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. மறுத்ததால், தற்கொலை செய்வதாக கூறிய நிலையில், வீடியோ கால் பேசியபடியே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. ஆரோக்கிய மாதாவின் சகோதரி சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், ரஞ்சித் குமார்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!