undefined

நீ சமைச்சா சாப்பிட மாட்டாங்க...  சாதி காரணமாக பள்ளி சமையலறையிலிருந்து வெளியேற்றம்... பெண் பணியாளர் கதறல் !

 
 

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள சின்னரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவு திட்டத்தில் சமையல் பணியாளராக பணியாற்றிய நிரோஷா, சாதி காரணமாக பணியில் இருந்து விலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், “நீ சமைத்தால் சில மாணவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள்” என கூறி, இனி வேலைக்கு வர வேண்டாம் என்று தலைமை ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிரோஷா, வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகியபோதும், வேறு நபர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தன் மீது நடந்த சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை எதிர்த்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அரசு பள்ளியிலேயே இப்படியான சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “என் தலைமுறையிலாவது இந்த சாதிக் கொடுமைகள் முடிவுக்கு வர வேண்டும்” என்ற நிரோஷாவின் குரல், சமூகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!