சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அபராதம்... உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!
தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளில் சமீபகாலமாக கால்நடைகள் அதிகமாக அலைந்து திரிவதால், போக்குவரத்துக்கு பெரிய இடையூறு ஏற்பட்டதோடு விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. இதை குறித்து பொதுமக்களின் புகார்கள் அதிகரித்ததால், மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின்படி மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
நகர்நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான குழு நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை சாலைகளில் ரெய்டு நடத்தினர். பாளை ரோடு அரசு பாலிடெக்னிக் அருகே சுற்றித்திரிந்த 8 மாடுகள், மேலும் முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் பகுதிகளில் இரவுநேர போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 17 மாடுகள் ஆகியவை இணைந்து மொத்தம் 25 மாடுகள் பிடிக்கப்பட்டன. கடந்த வாரமே மேலும் 35 மாடுகள் பிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிக்கப்பட்ட அனைத்து கால்நடைகளும் மாநகராட்சி கோசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு உணவு வழங்கி பராமரிக்கப்பட்டன. சாலைகளில் கால்நடைகளை அலைந்து திரிய விடும் உரிமையாளர்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி அதிகாரிகள், இந்த நிலை தொடர்ந்தால் அபராதமும் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!