விதிமீறிய செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம்!
சென்னையில் விதிகளை மீறி செல்லப்பிராணிகளை அழைத்து வந்த உரிமையாளர்களுக்கு மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவெளிகளில் நாய்களுக்கு வாய்மூடி மற்றும் கழுத்துப்பட்டை அணிவிக்காமல் அழைத்து வந்ததாக 337 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.3.33 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வரும் நாட்களிலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறும் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!