ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து… பரபரப்பு வீடியோ !
Feb 8, 2026, 17:29 IST
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் ஓடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தில்லியில் இருந்து ஜெய்சால்மர் நோக்கி சென்ற ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் அடிப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. ஆபத்தை உணர்ந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.
தீ அணைக்கப்பட்ட பிறகு ரயில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கி ஜெய்சால்மர் சென்றடைந்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. லோகோ பைலட்டின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!