அதிகாலையில் அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து...பெண் பயணி உயிரிழப்பு!
Dec 29, 2025, 10:10 IST
ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில், ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் திடீர் தீ விபத்தில் சிக்கியது. ரெயிலின் பி1 மற்றும் எம்1 ஆகிய இரண்டு ஏ.சி. பெட்டிகளில் தீப்பற்றியதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரு பெண் பயணி உயிரிழந்தார். மேலும் சில பயணிகள் தீ விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!