பற்றி எரிந்த கட்டிடம்... வாளியில் தண்ணீர் ஊற்றி தீ அணைத்த காட்சி... வைரல் வீடியோ!
பாகிஸ்தானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் நவீன இயந்திரங்களை பயன்படுத்தாமல் வாளிகளில் தண்ணீர் ஊற்றும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த முறையில் தீயை அணைக்க முயன்றனர்.
அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்களை குறை கூற வேண்டாம் என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். போதிய நிதி மற்றும் உபகரணங்களை வழங்காத அரசையே கேள்வி கேட்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ எந்த நகரில் எப்போது எடுக்கப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இயந்திரக் கோளாறா அல்லது அடிப்படை வசதி இல்லாமையா என்பதும் தெரியவில்லை. நவீன காலத்தில் அவசர சேவைகள் இவ்வளவு பின்தங்கியிருப்பது மக்கள் பாதுகாப்புக்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!