தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து... பல கோடி சேதம்!
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. ஐந்து அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே 1 மற்றும் 2ஆம் அலகுகள் தீ விபத்தால் சேதமடைந்து பராமரிப்பில் உள்ளன. தற்போது 3, 4, 5ஆம் அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் துறைமுக பகுதியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படும் பகுதி–2ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள செகண்டரி கிரஷர் எனப்படும் நிலக்கரி அரைக்கும் பகுதிக்கும் தீ பரவி இரு இடங்களும் மளமளவென எரிந்தன.
அதனைத் தொடர்ந்து அனல் மின் நிலையம் மற்றும் மாநகர தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களுடன் விரைந்து சென்று சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் மற்றும் அரைக்கும் பகுதி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தெர்மல் நகர் காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!