தடய ஆய்வகத்தில் திடீர் தீ… கணினிகள் சேதம்!
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தெலங்கானா தடய அறிவியல் ஆய்வகத்தில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது ஆய்வகத்தில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், காலை 10.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 10.22 மணிக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து புகை வெளியேறிய நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்களும் ஒரு தீயணைப்பு ரோபோவும் பயன்படுத்தப்பட்டன. முதல் தளத்தின் ஒரு பகுதியில் மட்டும் தீ பரவியதால் சில கணினி அமைப்புகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!