சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ… 3 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பார்கானா மாவட்டத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தா புறநகர் பகுதியான நஜிராபாதில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 7 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிடங்கிற்குள் 6 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தேடுதலில் 3 பேரின் உடல்கள் முழுவதுமாக கருகிய நிலையில் மீட்கப்பட்டன. உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!