கிடங்கில் பயங்கர தீ விபத்து... 7 பேர் பலி !
கொல்கத்தா நேற்று அதிகாலை நசிராபாத்தில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் 7 சடலங்களை மீட்டுள்ளனர்.
தீ வேகமாக பரவியதால் உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டனர். சிலர் தங்களது உறவினர்களுக்கு போன் செய்து, “தப்பிக்க வழியில்லை” என கதறியதாக கூறப்படுகிறது. 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு, ஒரு நாள் முழுவதும் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயின் தீவிரம் காரணமாக மீட்புப் பணிகள் கடும் சிரமத்துடன் நடைபெற்றன.
அந்த வளாகத்தில் பிரபல உணவு சங்கிலி கிடங்கும், டெகோரேட்டர் நிறுவனமும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் தொழிலாளர்கள் உள்ளே தங்கியிருந்ததே உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் கிடங்கு அருகே குவிந்து கண்ணீருடன் காத்திருந்தனர். மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!