பிப்ரவரி 9ம் தேதி தமிழகம் முழுவதும் தீ பாதுகாப்பு பயிற்சி!
தமிழகத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்படுகிறது. தீ விபத்து ஏற்படும் முன்னர் தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் பயிற்சி வழங்கப்படும். இது தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் ஒருங்கிணைப்பில் நடைபெறும்.
இந்த பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பாதுகாப்பு காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சியில் தீ பாதுகாப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகள் பற்றிய விரிவான கற்றல் நடைபெறும்.
பிப்.9-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி நடைபெறும். பாதுகாப்பு காவலர்கள் தங்களது அருகிலுள்ள தீயணைப்பு நிலையங்களில் கலந்து கொள்ளுமாறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநரும் டிஜிபி. சீமா அகர்வால் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!