undefined

வடக்கு காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச்சூடு ... எல்லையில் பெரும் பதற்றம்! 

 

 

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் அவ்வப்போது பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நவ்காம் செக்டரில் உள்ள டிஎம்ஜி (டூட் மர் கலி) பகுதியில் நண்பகலில் இந்திய நிலைகளை குறிவைத்து சிறிய ரக ஆயுதங்களால் சுட்டதாக கூறப்படுகிறது.

திடீர் துப்பாக்கிச்சூட்டால் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு சூடு நின்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய நடவடிக்கைக்கு இந்திய தரப்பில் தேவையான பதிலடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலைமை குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!