undefined

முதன்முறையாக சோலார் படகு சேவை தொடக்கம்!

 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் முன்னெடுப்பில், மாநிலத்தின் முதல் காலநிலை மீள்திறன்மிகு கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில், சூரிய ஒளி சக்தியில் இயங்கும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு இல்லத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்துகொண்டு படகு சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அலுவலர்களுடன் இணைந்து அவர் சோலார் படகில் பயணம் செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக தமிழ்நாட்டில் 11 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில் ஒரு பகுதியாக சிதம்பரம் தாலுகாவுக்குட்பட்ட கிள்ளை பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிள்ளை பகுதியை பசுமை வளாகமாக மாற்ற வனத்துறை, மீன்வளத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

அதன் ஒரு பகுதியாக, பிச்சாவரம் படகு இல்லத்தில் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, காற்று மற்றும் நீர் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ரூ.24 லட்சம் மதிப்பில் 100 சதவீதம் சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த படகில் ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்ய முடியும். சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய அனுபவமாக இது அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!