இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்...  தமிழக மீனவர்கள் 10 பேர் கைது...   !

 

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களையும் அவர்களது ஒரு விசைப்படகையும் சிறைபிடித்த கடற்படையினர், அவர்களை விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதி மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாகத் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஏற்கனவே பல மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடி வரும் நிலையில், தற்போது மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவ அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்டது அவர்களின் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கும் மீனவர்களைப் பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிக்கடி நடக்கும் இத்தகைய அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே கடலோர மாவட்ட மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!