நாளை மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை... இன்று ராக்கெட் கவுண்ட்டவுன் தொடக்கம்!
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக ‘ஈ.ஓ.எஸ் என்-1’ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நாளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து, ‘பி.எஸ்.எல்.வி-சி62’ ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியுள்ளது.
விண்வெளி ஏவுதலை முன்னிட்டு, ஸ்ரீஹரிகோட்டா அருகே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!