மீனவர்களே உடனடியா கரைக்கு திரும்புங்க ...  அரசு அவசர எச்சரிக்கை! 

 
 

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையை ஏற்படுத்தி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி அரசு இன்று (24.11.2025) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடுமையான அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள தாழ்வு அழுத்தத்தை தொடர்ந்து, நாளை (25.11.2025) முதல் தமிழக கரையோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 – 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் கடும் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனவே, கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் படகுகள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் மீனவ கிராமப் பஞ்சாயத்துகள், படகு உரிமையாளர்கள் சங்கங்கள் உள்ளிட்டவை தங்கள் பகுதிகளில் உள்ள மீனவர்களிடம் இந்த தகவலைத் தெளிவாக அறிவிக்குமாறும், மழை மற்றும் கடல் சீற்றம் நிலவும் காலங்களில் அவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து பாதுகாக்குமாறும் புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!