undefined

 மீன்பிடி தடைக்காலம்.. வரத்துக் குறைவால் மீன் விலை உயர்வு... அசைவ பிரியர்கள் அதிருப்தி!

 

மீன்பிடித் தடைக்காலம் என்பதால், மீன் துறைமுகத்தில், மீன் வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயர்ந்திருந்தது இன்று ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்கி சமைக்கலாம் என்று ஆசையுடன் சென்றிருந்த அசைவ பிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. இதனால், நாட்டுப் படகு, பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு, பைபர் படகுகள் நேற்று கரை திரும்பின. 

கோடை வெயிலின் தாக்கத்தால், மீன்வரத்து குறைந்து காணப்பட்டது. கோடை விடுமுறை காரணமாக, மீன்களை வாங்குவதற்கு அதிகமானோர் வந்திருந்தனர். இதனால், மீன்கள் விலை உயர்ந்திருந்தது.

சீலா மீன் கிலோ ரூ. 1,600, ஊளி, பாறை, விளை ஆகியவை ரூ. 700, நண்டு ரூ. 800, நகரை ரூ. 500, கேரை ரூ. 300, வங்கனை மீன் ஒரு கூடை ரூ. 1,750, சாளை மீன் கூடை ரூ. 1,800 என விற்பனையாகின. வரத்து குறைவு என்றாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?