சபரிமலையில் மார்ச் 23ல் கொடியேற்றம்... பங்குனி திருவிழாவுக்கான முன்பதிவு தொடங்கியது!
சபரிமலையில் மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பூஜைகள் நடைபெற தொடங்கின. பக்தர்கள் ஒழுங்காக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 23ம் தேதி பங்குனி திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்த பிறகு நாளை மார்ச் 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை மீண்டும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 23ம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் திருவிழா ஆரம்பமாகும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழா நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பம்பை ஆறுயில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடத்தப்படும். தரிசனத்திற்கும் தங்கும் அறைகள் முன்பதிவிற்கும் தேவையான வசதிகள் இணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!