undefined

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு.. 49 பேர் பலி; 67 பேர் மாயம்!

 

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 67 பேரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டுப் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் பருவமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பகுதியில் உள்ள கிராமங்களைத் தாக்கிய வெள்ளம், வீடுகளை அடித்துச் சென்றது. நிலச்சரிவின் காரணமாக சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் புதையுண்டன.

இந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 67 பேர் மாயமாகினர் என்று தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.

தற்போது வெள்ளப் பெருக்கெடுத்துள்ள ஆறுகளிலும், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் உடல்களையும், உயிருடன் பிழைத்திருக்கக் கூடியவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!