undefined

நெகிழ்ச்சி... விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 11 தட்டுகளில் சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்!

 

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊருடையம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் கோவிலுக்குச் சீர்வரிசை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் அப்துல் சமது தலைமையில், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் சித்தீக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பள்ளிவாசலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்ற அவர்கள், 11 சில்வர் தட்டுகளில் பழங்கள், தேங்காய், இனிப்புகள், மாலைகள் மற்றும் வெற்றிலை, சந்தனம் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். கோவிலுக்கு வந்த இஸ்லாமியப் பெருமக்களை, கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் 1-வது மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். இரு தரப்பினரும் கைகுலுக்கித் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு திருப்பூரில் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜாதி, மதங்களைக் கடந்து மனிதநேயமே முக்கியம் என்பதைப் பறைசாற்றும் விதமாக அமைந்த இந்தச் சீர்வரிசை ஊர்வலம், சமூக வலைதளங்களிலும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!