துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் செல்லும் 36 விமானங்கள் ரத்து... சென்னையில் பயணிகள் கடும் அவதி!
இஸ்ரேல் - ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் அமெரிக்க ஏவுதளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சில நாடுகள் தங்களின் வான்வழிப் பகுதிகளை மூடியுள்ளன.
இதன் விளைவாக சென்னை விமான நிலையத்தில் 3வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 18 புறப்படும் விமானங்கள் மற்றும் 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் ஆகிய இடங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை 28 விமானங்கள், நேற்று 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 36 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய கிழக்கு நிலவரம் சீராகும் வரை இந்த பாதிப்பு நீடிக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!