துபாய், அபுதாபியிலிருந்து வரும் இந்திய விமானக் கட்டணங்கள் உயர்வு... போர் பதற்றம் எதிரொலி!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் இருந்து இந்தியா வருவதற்கான விமானக் கட்டணங்கள் பெரிதும் உயர்ந்துள்ளன. கடந்த சில நாட்களில், விமானக் கட்டணம் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பான இடங்களைத் தேடி தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு இந்த உயர்வு பெரும் சுமையையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவசரமாகப் பயணம் செய்ய வேண்டிய புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க விமான நிறுவனங்கள் கூடுதல் சேவைகள், கூடுதல் நியமன வசதிகள் போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக விமானத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!