விமானக் கட்டணங்களுக்கு இனி 'நோ லிமிட்'...  மத்திய  அரசு   அதிரடி ... டிக்கெட் விலை உயர வாய்ப்பு!

 

 விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக, உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த உச்ச வரம்பை  நீக்குவதாக ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2025 டிசம்பர் மாதம் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் மற்றும் விமான ரத்துகளால் கட்டணம் தாறுமாறாக உயர்ந்ததைத் தடுக்க, ஒரு வழிப் பயணத்திற்கு அதிகபட்சமாக 18,000 ரூபாய் என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீராகியுள்ளதாகக் கூறி, இன்று (மார்ச் 23, 2026) முதல் அந்த வரம்பை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

மத்திய கிழக்குப் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் (ATF) விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிசெய்ய ஏற்கனவே சில நிறுவனங்கள் 'எரிபொருள் கூடுதல் கட்டணம்' (Fuel Surcharge) என்ற பெயரில் விலையை ஏற்றியுள்ளன. இப்போது உச்ச வரம்பும் நீக்கப்பட்டுள்ளதால், குறிப்பாகப் பண்டிகைக் காலங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்குக் கட்டணம் பல மடங்கு உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இனி சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விமான நிறுவனங்களே தங்களின் கட்டணத்தைத் தீர்மானிக்கும் 'டைனமிக் ப்ரைசிங்' (Dynamic Pricing) முறை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

இருப்பினும், "விமான நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்; தேவையற்ற கட்டண உயர்வைத் தவிர்க்க வேண்டும்" என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், விமானக் கட்டணங்களை டி.ஜி.சி.ஏ (DGCA) தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், முறையற்ற கட்டண உயர்வு கண்டறியப்பட்டால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ, உச்ச வரம்பு நீக்கம் என்பது இனி சாதாரண எளிய மனிதர்களின் 'விமானப் பயணக் கனவை' எட்டாக் கனியாக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!