2 வரை லட்சம் செலவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற பறந்து வரும் கேரளவாசிகள்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு வருவதற்கான விமான டிக்கெட் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. சாதாரணமாக 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சில நேரங்களில் ஒரு டிக்கெட்டின் விலை 2.5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் இவ்வளவு உச்சத்தில் இருந்தபோதிலும், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமீரகத்தில் வசிக்கும் மலையாளிகள் சொந்த ஊருக்குத் திரும்புவதில் உறுதியாக உள்ளனர். சுமார் 19 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வரும் முனீர் என்பவர், தனது ஜனநாயக கடமையை ஆற்ற 2.3 லட்சம் ரூபாய் செலவில் டிக்கெட் எடுத்து கேரளா வந்துள்ளார். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, தனது வாக்குரிமையைச் செலுத்துவதே முதன்மையான கடமை என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே அஜ்மான் நகரில் வசிக்கும் ஆஷா மற்றும் அவரது தங்கை நிம்மி ஆகியோரும் தலா 1 லட்சம் ரூபாய் செலவு செய்து வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் மலையாளிகள் வசித்து வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பெரும் தொகையைச் செலவிட்டுச் சொந்த ஊருக்குப் படையெடுத்து வருகின்றனர். போர் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் இவர்களின் ஆர்வம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!