தாய்லாந்தில் வெள்ளப் பேரழிவு ... உயிரிழப்பு 145 ஆக உயர்வு!
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் பெரும் மனிதாபிமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 மாகாணங்களை மூழ்கடித்த வெள்ளத்தில் ஏற்கெனவே 12 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மொத்தம் 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்பு அதிகமுள்ள எட்டு மாகாணங்களில் மட்டும் 145 பேர் பலியானது உறுதியாகும் நிலையில், சோங்க்லா மாகாணம் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டுமே 110க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வெள்ள நீர் குறைவடைந்து வரும் போதும், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு, பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் பலர் தங்குமிடம் இன்றி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள் என்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது மனதை பிளக்கும் வகையில் உள்ளது. வியட்நாம், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் தொடர்ச்சியாக வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்து வரும் சூழ்நிலை கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!