undefined

மணிமுத்தாறு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. 6வது நாளாக குளிக்கத் தடை - ஏமாற்றத்துடன் திரும்பும் ஐயப்ப பக்தர்கள்!

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவி, சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளால் களைகட்டும் இடமாகும். ஆனால், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அங்குச் செல்ல வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளது. பாறைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வது ஆபத்தானது எனக் கருதி வனத்துறையினர் தடையை நீட்டித்து வருகின்றனர்.

சபரிமலைக்குச் செல்லும் வழியில் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அருவிகளில் புனித நீராட வரும் ஐயப்ப பக்தர்கள், 6வது நாளாகத் தடை நீடிப்பதால் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். மாட்டுப் பொங்கல் தினமான இன்று குடும்பத்துடன் அருவிக்கு வந்த பல சுற்றுலாப் பயணிகள், வனத்துறை சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

அருவிப் பகுதியில் நீர்வரத்து குறித்து வனச்சரகர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு முழுமையாகக் குறைந்து, பாறைகளில் வழுக்கல் தன்மை நீங்கிய பிறகு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!