தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23.28 கோடி பறிமுதல்... பறக்கும் படைகள் அதிரடி வேட்டை!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான தேர்தல் களத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று மார்ச் 17, 2026 வரை தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பறக்கும் படைகள்: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 4,320 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.துறை சார்ந்த கண்காணிப்பு: வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 25 துறை சார்ந்த கண்காணிப்புக் குழுக்களும் இந்த சோதனைகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.

விளம்பரங்கள் அகற்றம்: இன்று வரை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வரையப்பட்டிருந்த 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்ட 61 இனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.செலவு வரம்பு: ஒரு வேட்பாளர் தனது தேர்தல் பணிகளுக்காக அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய முடியும். இதற்கு மேலான செலவினங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள தேர்தல் ஆணையம், மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என்றும், ஆனால் தற்போது அரசியலில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்கள் அல்லது பொது இடங்களில் இருந்தால் அவை உடனடியாக மறைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அர்ச்சனா பட்நாயக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!