undefined

பிரபல  நாட்டுப்புற பாடகி கலைமாமணி ‘கொல்லங்குடி கருப்பாயி’ காலமானார்! 

 
 


தமிழ் சினிமாவில் மூத்த நடிகை கொல்லங்குடி கருப்பாயி. இவர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருந்தார். பாட்டுப்பாடி நடித்திருந்தது அந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.  

இவர் மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை கொல்லங்குடி உள்ள கொல்லங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர்.  இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட 1000க்கும்  மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். 

1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா இவருக்கு கலைமாமணி விருது வழங்கினார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி தற்போது காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவருக்கு வயது 99. மேலும் இவரது மறைவுக்கு  திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது