undefined

 டிசம்பர் 28 வரை  பெசன்ட் நகர் கடற்கரையில் ‘மதி’ உணவுத் திருவிழா நீட்டிப்பு!

 
 

சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற உணவுத் திருவிழாக்களுக்கு கிடைத்த அபரிமிதமான ஆதரவைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 21.12.2025 அன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ‘மதி’ உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடக்க நாளிலேயே பொதுமக்கள் கூட்டம் திரண்டது. உணவு பிரியர்களிடையே திருவிழா பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திருவிழாவில் சென்னை தெரு உணவு முதல் ஆம்பூர் பிரியாணி, மதுரை கறி தோசை, கொங்கு மட்டன் பிரியாணி, கோவில் இட்லி, விருதுநகர் புரோட்டா, சாத்தூர் சேவு உள்ளிட்ட 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 38 அரங்குகளில் உணவுகள் உடனடியாக சமைத்து சுகாதாரமாக பரிமாறப்படுகின்றன. கூடுதலாக 12 அரங்குகளில் பாரம்பரிய தின்பண்டங்கள், சிப்ஸ், தேநீர், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருவிழா நடைபெறும் நாட்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தரம், சுகாதாரம், விற்பனை, சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மக்களின் வரவேற்பு, பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் ஆகியவற்றை முன்னிட்டு இந்த உணவுத் திருவிழா 28.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வந்து உணவுகளை ருசித்து, மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!