undefined

 காஸாவில் உணவு  பற்றாக்குறை... ஒரு லட்சம் பேருக்கு  ‘பேரழிவு’ பசி  !

 
 

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் ஓரளவு அதிகரித்துள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மிக மோசமான ‘பேரழிவு’ நிலை உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சுமார் 5 லட்சம் பேர் அவசர நிலை பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்துக்குப் பிறகு நிலைமை மெதுவாக சீராகி வருவதாகவும், ஆனால் இந்த முன்னேற்றம் மிகவும் மந்தமாக இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மீண்டும் போர் தொடங்கினால், காஸா முழுவதும் கடுமையான பஞ்சம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த பகுதியும் அதிகாரப்பூர்வமாக ‘பஞ்சப் பகுதி’ என அறிவிக்கப்படவில்லை.

இந்த அறிக்கைக்கு இஸ்ரேல் அரசு கடும் மறுப்பு தெரிவித்துள்ளது. காஸாவின் நிலைமையை ஐபிசி அமைப்பு தவறாக சித்தரிப்பதாகவும், உண்மை நிலை அந்த அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை என்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் காஸா நிலவரம் குறித்து சர்வதேச அளவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!