48 அணிகள், 104 போட்டிகள் ... ஜூன் 11ல் திட்டமிட்டபடி  ’பிபா’ கால்பந்து போட்டி!  

 

உலகமே ஆவலுடன் காத்திருக்கும் 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் கால்பந்து ரசிகர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஈரான் அணி தனது குரூப்-ஜி  பிரிவு போட்டிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் ஆகிய அமெரிக்க நகரங்களில் விளையாட வேண்டியுள்ளது. ஆனால், தற்போது நிலவும் போர் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், ஈரான் விளையாடும் போட்டிகளை மட்டும் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டும் என ஈரான் கால்பந்து கூட்டமைப்பு பிபா-விடம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததால், போட்டி அட்டவணை மாற்றப்படலாம் எனத் தகவல்கள் பரவின.

இந்தக் குழப்பங்களுக்கு இன்று (மார்ச் 20, 2026) முற்றுப்புள்ளி வைத்துள்ள பிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ   "உலகக் கோப்பை கால்பந்து தொடர் அசல் அட்டவணையின்படியே திட்டமிட்டபடி நடைபெறும்; அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், "கால்பந்து என்பது நாடுகளை இணைக்கும் ஒரு பாலம். 48 அணிகளும் விரைவில் உறுதி செய்யப்பட்டு, ஜூன் 11-ஆம் தேதி மெக்சிகோ சிட்டியில் தொடக்க ஆட்டம் அரங்கேறும். அமைதியை நிலைநாட்ட விளையாட்டு ஒரு கருவியாக இருக்கும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிபாவின் இந்த உறுதியான அறிவிப்பால், அட்டவணை மாற்றம் குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!