அடி தூள்!! 3 நாட்களுக்கு  அனுமதி இலவசம்!!  தாஜ்மஹாலில் எல்லாமே ஃப்ரீ தான்!!

 

காதலின் அழியா சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்வது தாஜ்மஹால். இந்த தாஜ்மஹாலை  ஷாஜகான் தனது மனைவிக்காக கட்டினார். இதனை கடைசிக் காலத்தில் பார்த்துக் கொண்டே  இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதனை கண்டுகளிக்க இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இன்றைய தினம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காதலர்களுக்கு கவர்ச்சிகரமான அதிரடி அறிவிப்புக்களை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பிப்ரவரி 17ம் தேதி ஷாஜகானின் நினைவு நாள். இதனை நினைவு கூறும் வகையில் 3 நாட்கள் தாஜ்மஹாலில்  நுழைவு கட்டணம் இலவசம் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஷாஜகான். மேவாரின் இராசபுத்திரர்கள் மற்றும் தக்காணத்தின் லோடிக்களுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புகளில் ஷாஜகான் பங்கெடுத்தார். 1627-ம் ஆண்டு அக்டோபரில் ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகு தனது தம்பி சகாரியார் மிர்சாவைத் தோற்கடித்த பிறகு, ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் பேரரசராகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொண்டார்.

இவர் செங்கோட்டை, ஷாஜகான் மசூதி மற்றும் தாஜ்மகால் ஆகிய பல்வேறு நினைவுச்சின்னங்களைக் கட்டினார். தாஜ் மகாலில் இவரது விருப்பத்துக்குரிய மனைவியான மும்தாசு மகால் அடக்கம் செய்யப்பட்டார். ஜனவரி 22, 1666 அன்று, அவர் தனது 74 வயதில் இறந்தார். அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் அடக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஷாஜகானின் 368வது நினைவு நாளையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களும் ஷாஜகானின் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வரலாற்றுச் சின்னம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க