அரசியலில் ஆர்வம் இல்லை… இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் திட்டவட்டம்!
பிரபல கால்பந்து வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மணி விஜயன் தேர்தல் அரசியலில் தமக்கு ஆர்வம் இல்லை என்று தெரிவித்துள்ளார். கேரளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல அரசியல் தலைவர்கள் தன்னை அரசியலுக்கு அழைத்ததாக கூறினார்.
நடிகரும் அரசியல் தலைவருமான சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் தன்னை அரசியலில் ஈடுபடுமாறு கேட்டதாகவும், குடும்பத்தினரும் அதற்காக வற்புறுத்தியதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போதும் அரசியல் அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் தேர்தலில் போட்டியிடும் அரசியலில் தமக்கு விருப்பம் இல்லை என்று மணி விஜயன் தெளிவுபடுத்தினார். இருப்பினும் எந்தக் கட்சி மாநிலங்களவை இடம் வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார். கேரளத்தில் பெரும் ஆதரவு கொண்ட விளையாட்டு வீரராக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!