உலகக்கோப்பை கால்பந்து...  கடைசி கட்ட 'பிளே-ஆப்' போர் இன்று தொடக்கம்!

 

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள இருபத்தி மூன்றாவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதிக்கட்ட தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள நாற்பத்தி எட்டு அணிகளில் இதுவரை நாற்பத்தி இரண்டு அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள ஆறு இடங்களைப் பிடிப்பதற்கான வாழ்வா சாவா போராட்டத்தில் பதினாறு நாடுகள் மோதுவதால் கால்பந்து ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தகுதிச் சுற்றுக்கு வந்துள்ள இந்த பதினாறு அணிகளும் 4  பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோத உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும். அந்த இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடும் அணிகள் மட்டுமே உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவிற்குள் நுழைய முடியும் என்பதால் ஒவ்வொரு நிமிடமும் மைதானத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த இத்தாலி அணி இந்தப் பிளே-ஆப் சுற்றில் விளையாடுவது ரசிகர்களுக்குச் சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இத்தாலி அணி இன்று நடைபெறும் முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை கனவைத் தக்கவைத்துக் கொள்ள இத்தாலிக்கு இது ஒரு இக்கட்டான சோதனைக்காலம் என்பதால் ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் இந்த ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!