ஜனாதிபதி மாளிகையில் முதன்முறையாக... இனி இந்திய வீரர்களின் கம்பீரம் - ஜனாதிபதி முர்மு அதிரடி நடவடிக்கை!
இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. காலனி ஆதிக்க மனப்பான்மையின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட அந்தப் படங்களுக்குப் பதிலாக, இந்தியாவின் உயரிய ராணுவ விருதான 'பரம் வீர் சக்ரா' வென்ற 21 மாவீரர்களின் புகைப்படங்கள் அங்கே கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. "பரம் வீர் திர்கா" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய புகைப்படக் காட்சிக் கூடத்தைச் (Gallery) ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் முறைப்படி திறந்து வைத்தார்.
இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுயமரியாதையை மீட்டெடுக்கும் ஒரு மைல்கல்லாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. போர்க்களத்தில் தன்னிகரற்ற துணிச்சலை வெளிப்படுத்தி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் கௌரவிப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த கால அடிமைத்தனத்தின் சுவடுகளை நீக்கி, இந்திய தேசத்தின் உண்மையான நாயகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ஜனாதிபதி மாளிகை இதன் மூலம் வழங்கியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்துப் பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எந்தவொரு சவாலான சூழலிலும் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், இந்திய மண்ணைக் காக்கப் போராடிய மாவீரர்களுக்குச் செலுத்தப்படும் மிகச்சிறந்த அஞ்சலி இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு வரும் மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இனி இந்தியாவின் வீர வரலாற்றைப் பறைசாற்றும் இந்த வீரர்களின் தியாகக் கதைகளை இந்தப் புகைப்படங்கள் வழியாகத் தெரிந்துகொள்ள முடியும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!