அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி கார் விபத்தில் மரணம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி, கோவை மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்து.விபத்திற்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்ய பிரியா( 28) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் பாலம் அருகே திவ்ய பிரியா சென்றுக் கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது.
திவ்யப்பிரியா மதுரையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். தனது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் காரில் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றுள்ளனர்.
பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.. மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, இவர்களது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் திவ்யப்பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திவ்யப்பிரியா, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!